சென்னை; நாடாளுமன்றம் வரும் 10ந்தேதி கூட உள்ள நிலையில், நாளை (மார்ச் 9ந்தேதி) திமுக எம்.பி.க்கள் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. நாளை காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற திங்கட்கிழமை பாராளுமன்றம் கூட உள்ள நிலையில், தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க இக்கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடப்பு ஆண்டு (2025) நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூட்டம் தொடங்கியது. இதையடுத்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆரம்ப நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கி நாடாளுமன்ற அமர்வு நடைபெற்று முடிந்தது.
இதையடுத்து, இரண்டாவதுஅமர்வு மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது.