சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் ஆதரிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2013 ஆம் ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா உட்பட பல மாநிலங்கள் நீட் தேர்விற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. கல்வி இணக்கப் பட்டியலில் ( Concurrent List) வருவதால் தங்கள் அதிகார வரம்பில் தலையிடுவது போன்று ஆகும் என சில மாநிலங்கள் வாதிட்டன. இதையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நீட் தேர்வு அரசியலமைபிற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால் மத்தியஅரசு செய்த மேல்முறையீடு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  நீட் தேர்விற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இதைத்தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. முதல் நீட் தீர்வு மே 7, 2017:ஆம் ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், நீட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பிற மொழி கேள்விகள் வேறாக இருந்தன  இது சர்ச்சையானது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில்,   நீட் தேர்விற்கான முடிவுகளை வெளியிட கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் ஜூன் 12, 2017 இடைகால உத்தரவு பிறப்பித்தது. பின்னர் மேல்முறையீடு வழக்கில் நீதி மன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, ஜூன் 23, 2017: ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் : தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை யின்போது, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மாநில அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களியே எதிர்ப்பு உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அரசு பள்ளி மாணாக்கர்களுக்குஇலவசமாக நீட் கோச் கொடுத்து தயார் செய்வதுடன், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி, தமிழ்நாடு மாணவர்கள் மருத்துவம் படிக்க உதவி செய்து வருகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றிய திமுக அரசு, நீட் தேர்வு குறித்து,  ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைத்து ஆயுவு செய்து அறிக்கை வாங்கி உள்ளது. இதில், பெரும்பாலோர் நீட் தேர்வு தேவையில்லை என்று கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும், விவாதங்கள் எழுந்தன. அப்போது, நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவுக்கு ஆதரவாக அதிமுக நிற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், திமுக ராஜ்யசபா எம்.பி. வழக்கறிஞர் வில்சன், நீட் தேர்வுக்கு எதிராக தனி நபர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதங்கள் விரைவில் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் குறித்த முடிவு அறிவிக்கப்படும்.

தற்போதைய நிலையில், ராஜ்யசபாவில் திமுகவிற்கு 7 எம்.பி.க்கள் உள்ளனர். அதிமுகவிற்கு 5 எம்.பி.க்களும், அதிமுக கூட்டணி கட்சிகளான பாமகவுக்கு ஒரு எம்.பியும், தமாகாவுக்கு ஒரு எம்.பி.க்களும்உள்ளனர். இரு அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 14 எம்.பி.க்கள் உள்ளனர்.

திமுக எம்.பி. கொண்டுவந்துள்ள நீட் தீர்மானத்துக்கு தமிழ்நாட்டின் நலன் கருதி அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் ஆதரிப்பார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இதுபோன்ற முக்கிய விவகாரங்களில், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக கூட்டணி எம்.பி.க்கள் பல முறை, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல், வெளிநடப்பு செய்வது வழக்கமான நடைமுறை.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில்  தேசிய மருத்துவ ஆணைய மசோதா வாக்கெடுப்பு நடந்த சமயத்தில், அதிமுக வெளிநடப்பு செய்தது. மேலும், முத்தலாக் தடை மசோதா மீதான வாக்கெடுப்பை அதிமுக புறக்கணித்து வெளிநடப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திமுக எம்.பி.யி நீட் தனிநபர் தீர்மானத்தை  அதிமுக ஆதரிக்குமா? அல்லது வெளிநடப்பு செய்யுமா?  என்பது விரைவில் தெரிய வரும்.