சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இடபிள்யுஎஸ் கோட்டா மாணவர்களுக்கான கட்ஆப் குறைப்பு ஏன்? என்பது குறித்த திமுக எம்.பி. அப்துல்லாவின் கேள்விக்கு காரணம் இல்லை என பதில் கூறப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியஅரசு கொண்டு உயர் வகுப்பினருக்கான 10சதவிகித இடஒதுக்கீடு விவகாரத்தில் சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. ஆனால், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திமுக சார்பிலும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாராளுமன்ற மாநிலங்களவையில், திமுக அமைச்சர் எம்எம் அப்துல்லா, நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில், இடபிள்யுஎஸ் ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, கட்ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதன் காரணம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி இணையமைச்சர், அதுதொடர்பாக காரணம் குறித்து எந்த விவரமும் அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.