கரூர்: திருச்சி அருகே கரூரில் பிரமாண்டமாக நடைபெற்ற  தி.மு.க முப்பெரும் விழாவில், திமுக எம்.பி. கனிமொழி  பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அதை கனிமொழி எம்.பி. மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் இம்மூன்றையும் இணைத்து தி.மு.க. முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தி.மு.க. வரலாற்றில் முப்பெரும் விழா தனிச்சிறப்புப் பெற்றதாகும். அதன்படி , நடப்பாண்டு முப்பெரும் விழா கரூரில் பிரமாண்டமாக நடைபெற்றது.

 இம்முப்பெரும் விழாவையொட்டி மறைந்த தலைவர்கள் பெயரில் மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு  விருதுகள்  வழங்கி கவுரவிக்கப்படும். அதனப்டி நடப்பாண்டு முப்பெரும் விழா விருது பெறுபவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டன.

அதன்படி, அதன்படி, தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழிக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,

தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் – பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமனுக்கு அண்ணா விருதும், நூற்றாண்டு கண்டவரும், அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும், அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா. இராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும், . கழக மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினரும், குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் விருதும்,  கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் இராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருதும்,  ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருது;k வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி தேர்வாளர்களுக்கு  நேற்று கரூர் மாநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில்  தலைமைக் கழகம் சார்பில் கழகத் தலைவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி  கவுரவித்தார்.

முதலில் திமுகழகப் பணியை சிறப்பாக மேற்கொண்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு மண்டலங்கள் வாரியாக விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார். பின்னர்,பெரியார் விருது கனிமொழி எம்.பிக்கும், அண்ணா விருது சுப.சீத்தாராமன் அவர்களுக்கும், கலைஞர் விருது சோ.மா.இராமச்சந்திரன் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது குளித்தலை சிவராமன் அவர்களுக்கும், பேராசிரியர் விருது மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கும், மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்கு முரசொலி செல்வம் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார். இந்த ஆண்டு முதல் முரசொலி செல்வம் விருது வழங்கப்பட்டு வருகிறது.