டெல்லி: டெல்லியில் முகாமிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மத்தா பானர்ஜி இன்று ல் திமுக எம்.பி. கனிமொழியை சந்தித்து பேசினார்.

நடைபெற்று முடிந்த மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 2ஆவது முறையாக வெற்றி பெற்ற பின் மம்தா பானர்ஜி, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசை தோல்வியடைய செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  5 நாட்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள மத்தா, நேற்று முன்தினம்,  பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக மம்தா சந்தித்தார்.

அதைத்தொடர்ந்து , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். அதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய மம்தா,  பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு யார் தலைவராக வந்தாலும் அது தனக்கு சம்மதம்தான் என்று கூறியவர்,  பாரதிய ஜனதா என்ற பூனைக்கு மணி கட்டுவதுதான் தனக்கு முக்கியம் என்றும் அவர் கூறினார். மேலும்,  2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மோடிக்கும் நாட்டுக்கும் இடையில் நடைபெறுவதாக இருக்கும் என்றும் மம்தா தெரிவித்தார்

இதையடுத்து இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்து பேசினார். மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் டெல்லி வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதுகுறித்து டிவிட் பதிட்டுள்ள கனிமொழி,  ‘ மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப்பேசியது மகிழ்வளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். மத்திய அரசின் ஜனநாயக விரோதப் போக்கு மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போரில் மொத்த நாடும் ஒன்றுபட வேண்டியதின் அவசியம் குறித்தும் உரையாடினோம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.