சென்னை: விழுப்புரம் திமுக எம்.பி.யும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் மகனுமான கவுதம சிகாமணி நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக எம்.பியுமான கவுதம சிகாமணி விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர். மருத்துவரான இவர், 1992ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறார். கடநத 2005ம் ஆண்டு முதல் ஸ்டாலின் நற்பணி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இவர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.
இவருக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் சென்னை கிரிம்ஸ் ரோடு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Patrikai.com official YouTube Channel