நீலகிரி வெள்ள நிவாரணத்துக்கு திமுக எம்.பி.., எம்எல்ஏக்கள் ரூ.10 கோடி நிதி! ஸ்டாலின் அறிவிப்பு

Must read

நீலகிரி:

நீலகிரியில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, திமுக எம்எல்ஏ, எம்.பி.க்கள் நிதியிலிருந்து ரூ.10 கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கேரளாவில் பெய்து வரும் பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரி மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு, மரங்கள் விழுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு மீட்பு பணிகளை நடைபெற்று வரும் நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கடந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தும், நிவாரண உதவிகளும் வழங்கி வருகிறார். கனமழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஸ்டாலின், தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின,  “கூடலூர் முதல் மேட்டுப்பாளையம் வரை யிலான மழைநீர் வழித்தடங்களைச் சரிசெய்து திமுக ஆட்சி நடவடிக்கை எடுத்தது. இதுபோன்ற நடவடிக்கையை அதிமுக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். கிராமப்புற சாலையோரங்களில், நீர் ஓடுவதற்கான பாதைகளில் சிமெண்ட் தளங்கள் அமைத்திட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

மழைநீர் முழுவதுமாக வடிகின்ற வரையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது என்று கூறியவர்,  முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான  உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை அரசு வழங்கிட வேண்டும் என்றும்,  திமுக இங்கு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசுசு பெயருக்கு ஓரிரு அமைச்சர்களை அனுப்பி வைத்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாக கூறியது, ஆனால்,  அந்த அமைச்சர்களும், பப்ளிசிட்டிக்காக வந்துவிட்டு, பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக ஆராயாமல், மக்களைச் சந்திக்காமல் சென்றிருக்கின் றனர். இது கண்டனத்திற்குரியது என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின்,  கனமழையால் சுமார் 350 கி.மீ.க்கு சாலைகள் சேதமடைந்ந்து உள்ளது என்றும் தெரிவித்தார்.

நான் கடந்த 2 நாட்களாக  சுமார்  150 கி.மீ. நான் பயணம் செய்திருக்கிறேன். அந்த பகுதிகளில் ஏறக்குறைய 150 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊட்டி, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய தாலுகாக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட சாலைகளில் விரிசல் ஏற்பட்டிருக்கிறரது இது உடடினயாக சரி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் நீலகிரி மழை வெள்ளப் பாதிப்பு நிவாரணத்துக்காக  இத்தொகுதியின் எம்.பி. ஆ.ராசாவுக்கு இருக்கக்கூடிய தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாயை ஒதுக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். கூடலூர் எம்எல்ஏ திராவிட மணி, மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்திருக்கிறார். அதேபோன்று, மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் 5 பேரும் தலா ரூ.1 கோடி என 5 கோடி ரூபாய் வழங்க உள்ளார்கள். மொத்தம் 10 கோடி ரூபாய் நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கிறது.

மேலும், நீலகிரி தொகுதி எம்.பி.யான ஆ.ராசா இன்னும் 4-5 நாட்களுக்கு தங்கி நிவாரணப் பணிகளை முடுக்கிவிட இருக்கிறார். பிரச்சினைகள், குறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து, அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார்.

இந்த இரண்டு நாட்களாக நான் செய்த ஆய்வுகளைத் தொகுத்து முதல்வரிடம் மனு வழங்கப்படும். அவலாஞ்சி மின் ஊழியர்கள் வீடுகள் சேதம் குறித்தும் எடுத்துச் சொல்லப்படும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

More articles

Latest article