சென்னை: மத்திய அரசு வக்பு சட்ட திருத்தத்தை மக்களவையில் நிறைவேற்றியதை எதிர்த்து, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்  சட்டமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பினர்.

முன்னதாக,   வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர். வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் தலைமையில் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

 வக்பு வாரிய திருத்த மசோதா  மக்களவையில் இன்று அதிகாலை 2மணி அளவில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இன்று மாலை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இதையடுத்து, இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியவுடன் அமலுக்கு வரும். இந்த மசோதா காரணமாக  முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகள் இனி வக்ஃப் ஆக கருதப்படாது.

இந்த மசோதாவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,திமுகவும் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில்,  வஃபு மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கையில் பதாதைகளுடனும் சட்டசபைக்கு வந்தனர்

அவர்கள்,   சட்டசபை வளாகத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.  மத்திய அரசை கண்டித்தும், . இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே!  ஒன்றிய அரசே சிறுபான்மையினரை வஞ்சிக்காதே. இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிராகரிக்காதே! என்று வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.