சென்னை:
தமிழக சட்டமன்றம் வரும் 14ந்தேதி கூடுவதை தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக கொறடா உத்தரவிட்டுள்ளார்.
பட்ஜெட் மானிய கோரிக்கைகள் குறித்து விவாதித்து நிறைவேற்றுவது குறித்து இன்று முற்பகல் தமிழக உசட்டமன்ற அலுவல் ஆய்வுகுழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்ததும், இந்த மாதம் 14ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 19ந்தேதி வரை 24 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இதையடுத்து, திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியுள்ளார்.
இதுகுறித்து திமுக கொறடா விடுத்துள்ள அறிக்கையில், மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஜூன் 14ந்தேதி, அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று சட்டப் பேரவை திமுக கொறடா அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.