இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் கருப்பு உடையுடன் பங்கேற்ற கீதா ஜீவன்

சென்னை:

ஸ்டெர்லைட் கலவரத்திற்கு காரணம். தூத்துக்குடியை சேர்நத  தி.மு.கசட்டமன்ற உறுப்பினர்  கீதா ஜீவன் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் இன்று அரசுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பதில் அளித்து பேசிய க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் கலவரத்திற்கு காரணம் தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவன் தான் என் பகிரங்கமாக கூறினார். அதற்கான  புகைப்பட ஆதாரத்தை சட்டப்பேரவையில் காட்டி விளக்கம் அளித்தார்.

துப்பாக்கி சூடு நடைபெற்ற அன்று போராட்டத்தை முன்னெடுத்து சென்ற திமுக எம்எல்ஏ கீதா ஜீவன்

தனது அறிக்கையில் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில்  சில அரசியல் கட்சியினர் ஊடுருவினர் என்று கூறியது தி.மு.கவினரை தான் என்றும் மீண்டும் தெரிவித்தார்.

அப்போது,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ வைப்பு, காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு, 5 தடுப்புகளை மீறி போராட்டக் காரர்கள் கூடியதற்கான புகைப்படங்களையும்  சட்டப்பேரவையில் காட்டினார் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

ஏற்கனவே தூத்துக்குடி பொதுமக்கள், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான  மக்கள் போராட்டத்தின் போது வன்முறை, கலவரம் துப்பாக்கி சூட்டுக்கு கீதா ஜீவன் எம்எல்ஏதான்  காரணம் என்றும், மக்களுடன் இணைந்து போராட்டத்தை தொடங்கிய அவர், திடீரென்று மாயமாகி விட்டதாகவும்  குற்றம்சாட்டிய நிலையில், தற்போது தமிழக முதல்வரும் அதை உறுதிபடுத்தி உள்ளார்.