நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பாக மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் உறுப்பினர்களை அறிவித்து வருகின்றனர்.
அதன்படி, திமுக சார்பில் 20 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், 15 துணை மேர் பதவிகள் உள்பட 1201 பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் மாநகராட்சி மேயராக போட்டியிட ஏ.ராமச்சந்திரன் என்பவரை தேர்வு செய்து திமுக தலைமை அறிவித்து உள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சேலம் மத்திய மாவட்ட செயலாளரும், லம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மேயர் வேட்பாளர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.