திண்டுக்கல்: இந்தியாவைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என தேர்தல் பிரசார கூட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
தமிழக சட்மன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வரும் கம்யூனிஸ்டு இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியவர், ”திண்டுக்கல் தனித்துவம் மிக்க வரலாற்றைக் கொண்டது. சிவகங்கையில், வேலுநாச்சியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு தப்பி திண்டுக்கல் வந்தபோது, திப்பு சூல்தான் அவருக்கு உதவும் வகையில் மலைக்கோட்டையில் அடைக்கலம் கொடுத்தார்.‘ அப்படியிருந்த இந்து – முஸ்லீம் ஒற்றுமையை, இன்று ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் அழித்து வருகின்றன.
தமிழகம் மதச்சார்பற்று மனிதநேயத்தோடு இருப்பதால் தான் தமிழ்நாடு சிறந்துவிளங்குகிறது. ஆனால், அந்த மனிதநேயத்தை சிதைப்பதற்காகவே பாஜக – ஆர்எஸ்எஸ் பணிபுரிகிறது. அதற்கு அதிமுகவும் ஆதுரவாக செயல்கடுகிறது. உதவுகிறது. இதைத் தடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி தேவைப்படுகிறது.
மத்தியஅரசு குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் சிறுபான்மையினரை மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. இதனால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. இதை அனுமதிக்கக் கூடாது. பொதுத்துறை, விமானத்துறை, அமலாக்கத்துறை, கல்வித் துறை, பெட்ரோலிய துறை என அனைத்து துறை நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தனியாருக்கு தரை வார்க்கப்படுகின்றன.
இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் அதற்கு தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். அதிமுக அரசு மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து சட்டங்களையும் ஆதரித்து வருகிறது. அது தடுக்கப்பட வேண்டும். தேர்தல் வந்து விட்டால், மோடி, அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். அதை தான் அதிமுக அரசும் செய்கிறது. எனவே தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.