தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணி 147 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தலைநகர் சென்னையைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் திமுக வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்.
திருக்கோவிலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் பொன்முடி, அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் கலிவரதனை விட 20,704 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
செஞ்சி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் 33 ஆயிரத்து 333 வாக்குகள் பெற்று முன்னிலையில் பெற்றுள்ளார்.
விழுப்புரம் தி.மு.க வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் 781 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் சி.வி சண்முகம் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
பெரம்பலூர் (தனி) தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ம.பிரபாகரன் 6547 வாக்குகள் முன்னிலை வகித்துவருகிறார்.
செங்கம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் மு.பெ.கிரி, அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.நைனாகண்ணுவைவிட 4761 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசபாக்கம், வந்தவாசி ஆகிய ஐந்து தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.