சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் காலியா இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் திமுக முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான . ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலும் நடைபெற்று முடிந்தது. இரண்டு கட்டத் தேர்தல்களில் 77.95 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான ஊராட்சி பகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.