சென்னை:

ன்று பிறந்த நாள் காணும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  உங்கள் சகோதரனின் குரல் என்ற தலைப்பில்  உணர்ச்சிமிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 67வது பிறந்தநாள். இந்த ஆண்டு தனது தந்தை மு.கருணாநிதி  உயிருடன் இல்லாத நிலையில், பிறந்த நாளை கொண்டாடப்பபோவதில்லை என்றும், அன்றைய தினம் கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாம், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டும் செய்யுங்கள் என  ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ‘உங்கள் சகோதரனின் குரல்’ என்ற தலைப்பில் தமது டிவிட்டர்  வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.  சுமார் 2 நிமிடங்கள் 15 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஸ்டாலின் உணர்ச்சிமயமாக பேசியுள்ளார்.

சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

சுயமரியாதை – சமூகநீதி – சகோதரத்துவத்தை போற்றிப் பாதுகாக்கின்ற இந்த இலட்சிய பயணத்தில் என்னோடு கரம் கோர்க்க வாருங்கள்..

தனது தந்தை கருணாநிதி குறித்து மிக உருக்கமாகவும் ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

‘உங்கள் சகோதரனின் குரல்” -இல் இனி உங்களோடு கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி. இழந்தவற்றை மீட்போம்! தமிழகத்தை காப்போம்! என்று பேசியுள்ளார்.

நீங்களும் ஸ்டாலின் உணர்ச்சிமிக்க பேச்சு கேட்க கீழே உள்ள வீடியோவை பிளே செய்யுங்கள்…

https://t.co/oLCNsi0DzO