சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன்: திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

Must read

சென்னை: சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன். தற்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று அலையினை விழிப்போடு எதிர்கொள்ளுமாறும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறும் நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 27ம் தேதி முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தமது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

More articles

Latest article