சென்னை: திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
ரிஷிவந்தியம் தொகுதி எம் எல் ஏவான வசந்தம் கார்த்திக்கேயனுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்தினர் 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அனைவரும் கோவையில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந் நிலையில் வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: ஊரடங்கின் போது மக்களுக்கு தேவையான உதவிகளைத் தொய்வில்லாமல் வழங்கி வந்த வசந்தம் கார்த்திகேயன் MLA அவர்கள் #Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறேன். உற்சாகமாகப் பேசுகிறார். முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும்! என்று கூறி உள்ளார்.