தடைகளை உடைத்து மக்கள் சந்திப்பு தொடரும் – திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவீட்

Must read

சென்னை:

கோவையின் சூப்பர் முதல்வர் எஸ்.பி.வேலுமணி மிரட்டல்களால் திமுகவை தடுக்க முடியாது என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் அரசியல் நோக்கத்துடன் கிராமசபை கூட்டம் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை செயலர் தெரிவித்திருந்தார். ஆனாலும், மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் திமுக தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் திமுக-அதிமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சியினரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில்,

’மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் எழும் #WeRejectADMK முழக்கம் கேட்டுப் பதறுகிறது அதிமுக அரசு. @karthiknmla (கார்த்திக்), @PayyaGounder (ஆர்.ராதாகிருஷ்ணன்), @Thendraldmk (செல்வராஜ்), @ThiravidamaniM (திராவிடமணி) கைது!

கோவையின் சூப்பர் முதல்வர் @SPVelumanicbe (எஸ்பி வேலுமணி) மிரட்டல்களால் திமுகவைத் தடுக்க முடியாது; தடைகளை உடைத்து மக்கள் சந்திப்பு தொடரும்!’

என தெரிவித்துள்ளார்.

More articles

Latest article