சென்னை:
தமிழகத்தில் இன்று 38 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 7மணி முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
திமுக வேட்பாளர் கனிமொழி சென்னை மைலாப்பூரில் தன துவாக்கினை செலுத்தினார்.
அதுபோல திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் நிலை சரியில்லாத நிலையிலும் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு, வீல் சேரில் வந்து வாக்களித்தார்.
விழுப்புரம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.. குடும்பத்துடன் வாக்களித்தார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் காட்பாடியில் தனது வாக்கினை செலுத்தினார்.
ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தனது வாக்கை பதிவு செய்தார்.
ஆரணியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தமது வாக்கை பதிவு செய்தார்; கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார்
அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பொதும க்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.