சென்னை:  வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்க சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துகெள்ள திமுக தலைமை  கடந்த ஓராண்டாக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்தொடர்சசியாக வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி  என்ற திட்டதின்படி மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, திமுகவினர், பூத் கமிட்டி அளவில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் விதமாக இந்த பிரசாரததை  கையில் எடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின்,  வாக்குச்சாவடியை வென்றால் தொகுதிகளை வெல்லலாம் என கூறியிருந்தார். மேலும்,  தமிழ்நாடு முழுவதும் வாக்குச் சாவடி அளவில் வியூகம் வகுக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக இன்று வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை தொடங்கி வைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற  திமுக கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததுடன், இந்த திட்டத்ரதை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும்  திமுக  நிர்வாகிகள்   வீடு வீடாக சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். இந்த திட்டத்தில், அதிக அளவில்  திமுக பெண் நிர்வாகிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.‘

[youtube-feed feed=1]