2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது.
காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் வழங்கியுள்ள திமுக புதுச்சேரி தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்துள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக 21 இடங்களில் போட்டியிடுகிறது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ராமநாதபுரம் தொகுதியிலும், கொமதேக நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறது.
திமுக தலைமையிலான இந்த கூட்டணிக்கு கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் கூட்டணி கட்சிகளுக்காக வாக்குசேகரிப்பில் ஈடுபடப்போவதாகவும் கமலஹாசன் அறிவித்துள்ளார்.
ம.நீ.ம. கட்சிக்கு 2025 நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.