சென்னை:

ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக  இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா சமாதி முன் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்., சசிகலா மீது சரமாரியாக குற்றம்சாட்டினர்.  இதைத் தொடர்ந்து, சசிகலா, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பிறகு முதல்முறையாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“அதிமுகவினர் ஒரே குடும்பமாக உள்ளனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. பன்னீர்செல்வத்தை நாங்கள் மிரட்டவில்லை. நீங்களே பார்த்தீர்கள் அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் தன் அருகில் அமர்ந்து மகிழ்ச்சியாகவே பேசினார். . பிறர் தூண்டுதல் காரணமாகவே பன்னீர்செல்வம் பழிபோடுகிறார்.

நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்களோ அதைத்தான் நானும் நினைக்கிறேன் ஓபிஎஸ்க்கு பின்னணியில் திமுக இருக்கிறது.  காரணம், சட்டசபைக் கூட்டத்தில் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்துக் கொண்டனர்

.பன்னீர்செல்வம் மீது, கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்”  என்று  சசிகலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.