சென்னை: தமிழ்நாடு அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளதாக என்ஐஏ தகவல்களை சுட்டிக்காட்டி பிரபல பத்திரிகையான  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக அமைச்சர் கே.என்.நேரு பதவி வகிக்கும் நகராட்சி நிர்வாகத்துறையில்  ஒரு அரசு பணிக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சமாக பணம் (Cash for job Scam) பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது

தமிழ்நாடு அரசு ஏராளமான அரசு பணிகளை  டிஎன்பிஎஸ்சி உள்பட பல்வேறு துறை சார்ந்த தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இந்த  நிலையில், பல பணிகளுக்கு தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் லஞ்ச பேரம் நடைபெறுவதாகவும்,  அதை கொடுப்பவர்களுக்கே பணி கிடைப்பதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில்,  தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில், நேரடி நியமனமாக  வழங்கப்பட்டுள்ள அரசு பணிகளில் சுமார், ரூ.888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

திமுக அரசின் ‘ வேலைவாய்ப்பு ஊழல் குறித்த விவரங்களை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. க

இந்த ஊழல் “தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கும் 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான ஆள்தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் இந்த ஊழல் குறித்த ஆவணங்கள் கிடைத்ததாக தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்திருக்கிறது.

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வின் மூலம் மூலம் 2538 அதிகாரிகள், பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

லஞ்சம் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அமலாக்கத்துறை, இதற்கு மூளையாக செயல்பட்டவர்களின் விவரங்கள், ஊழல் எவ்வாறு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களையும் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது.

ஒரு பணிக்கு அதிகபட்சமாக ரூ.35 லட்சம் என்றால், 2538 பணிகளுக்கும் சேர்த்து சுமார் ரூ.888.கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் மூலம் வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் அமலாக்கத்துறை, இதற்கு மூளையாக செயல்பட்டவர்களின் விவரங்கள், ஊழல் எவ்வாறு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களையும் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது.

அதில்,  MAWS துறை 2,538 ஊழியர்களை நியமிப்பதில், ஒரு பதவிக்கு ரூ.25-35 லட்சம்  லஞ்சம் பெறப்பட்டதாக கூறுகிறது, தேர்வுகளில் மோசடி செய்யப்பட்டது என்று கூறியுள்ளதுடன்,  இதில்,  பல அரசியல்வாதிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது PMLA பிரிவு 66(2) இன் கீழ் TN காவல்துறையுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட கடிதத்திலும் ED எழுப்பிய கேள்விகள் மற்றும் 232 பக்க ஆவணத்திலும் தெரிய வந்துள்ளது.

இடி எழுப்பிய கேள்விகள்:

– தேர்வு முடிவுகள் முடிவுகளை தனியார் நபர்கள் எவ்வாறு அணுகினர்?
– ,இந்த ஊழலில் தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலைக்கழக ஊழியர்களின் பங்கு என்ன?
– இந்த மோசடியால் தோல்வியடைந்த தகுதிவாய்ந்த மாணவர்களின்  நிலை என்ன?

– இந்த மோசடியில் அரசியல்வாதிகள் மற்றும் தனியார் நபர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கை விசாரிக்கவும்
– PMLA இன் கீழ் பணமோசடி அம்சத்தை விசாரிக்க ED அனுமதிக்கும் வகையில் ஒரு வழக்கைப் பதிவு செய்யவும்.
– பணமோசடி ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, வங்கிக் கணக்குகள் மூலம் பணமோசடி செய்யப்பட்டது என்பது உள்பட ஏராளமான கேள்விகளை எழுப்பி உள்ளது.

Source: The New Indian Express