கள்ளக்குறிச்சி: சிமெண்ட் விலை உயர்வால் அந்நிறுவனங்களிடம் இருந்து திமுகவுக்கு ரூ.1500 கோடி கமிஷன் கிடைக்கிறது, அதனால்தான் அதன் விலையை குறைக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றம், அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் திறப்புவிழா செய்யும் பணியை மட்டுமே மு.க.ஸ்டாலின் செய்து வருகிறது என்று எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.
நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் சிமென்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உயர்ந்து விடுகிறது. இங்குள்ள சிமென்ட் நிறுவனங்கள், தங்களுக்குள் பேசி வைத்து, சிமென்ட் விலையை அவ்வப்போது உயர்த்தி வருவதாகவும், இதற்ளு ஆளும்கட்சி துணைபோவதாகவும் கட்டுமான நிறுவனங்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்,. கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு சிமென்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதும், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் சிமென்ட் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி உயர்த்தப்பட்ட விலையான ரூ. 50 குறைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் சிமென்ட் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வார நிலவரப்படி, முதல் தர சிமென்ட் சில்லறை விலை ஒரு மூட்டை 380 ரூபாயாக இருந்தது, தற்போது 450 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், ஆனால் மற்ற மாநிலங்களில் இதுபோன்ற சிமெடன்ட் விலை உயர்த்தப்படவில்லை. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் சிமென்ட் மற்ற மாநிலங்களில் விலை குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் சிமென்ட் விலை ரூ.350 வரையே விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் 300 முதல் 350 வரையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மற்றும் சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி , சிமென்ட் விலை உயர்வு குறித்து கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், கட்டுமான பொருட்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது. சிமெண்ட் விலை உயர்வின் காரணத்தினால் நாளொன்றுக்கு திமுக அரசுக்கு 1500 கோடி கமிஷன் செல்கிறது எனவும் குற்றம் சாட்டியதுடன், இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்என்றார்.
தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழாவை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார் என்று கூறியதுடன், திமுக ஆட்சியின் மின்வெட்டு வரும் என நாங்கள் கூறியபடியே மின்வெட்டு உள்ளது. இதுகுறித்து திமுக அரசுக்கு நாங்கள் பலமுறை எச்சரித்தும் திமுக அரசு சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தற்பொழுது மின் வெட்டு காரணமாக பொதுமக்களும் விவசாயிகள் வேளாண் பணிகளை நிறை வேற்ற முடியவில்லை. தொழிற்சாலைகள் சரியாக செயல்படாததால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.