திருச்சி

திருச்சியில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட துரைமுருகனுக்குக் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வுக் கூட்டம் நேற்று திருச்சியிலும் இன்று திண்டுக்கல்லிலும் நடைபெற்றது.  இதில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்றார்.  அவர் இந்த நிகழ்வுகளுக்கு பிறகு சென்னை திரும்பும் போது காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதையொட்டி அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்துக் கொண்டுள்ளார்.   அவருக்கு உடல் சோர்வினால் காய்ச்சல் உண்டானதாக தகவல்கள் தெரிவித்தன. 

இந்நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதால் அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன.