பொள்ளாச்சி: பைனான்சியரை கடத்திச்சென்று  ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த பொள்ளாச்சி திமுக நிர்வாகி மற்றும் அவருக்கு துணையாக இருந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக, தேர்தல் நிதி வசூலிக்கும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேர்தல் நிதி வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கி உள்ளன. கொரோனா தொற்று காரணமாக வணிகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், அரசியல் கட்சியினரின் நிதி வசூலிப்புகளும் சர்ச்சையை உருவாக்கி வருகின்றன.

இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் பைனான்சியர் ஒருவர் திமுகவினரால் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியில் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்துவருகிறார் சாந்தகுமார் (வயது 40).   இவர் கடந்த 13-ம் தேதி மதியம் கடைக்கு சென்றுவிட்டு, மதிய வேளையில் தனது  இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கோட்டூர் ரோடு பாலத்தில்  சென்று கொண்டிருந்தபோது, எதிரே காரில் வந்தவர்கள் சாந்தகுமாரை வழிமறித்து,  தாக்கி, கத்தியைக் காட்டி கடத்திச்சென்றனர். பின்னர், ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாகவும், அவர் தன்னிடம் அவ்வளவு பணம் கிடையாது,  என்று மறுத்ததால், அவரை கடத்தியவர்கள் கடுமையாக தாக்கிவிட்டு,  சென்றான்பாளையம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த சாந்தகுமார் அங்கிருந்து தப்பித்து,  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.  அவர் கொடுத்த தகவலின்படி புகார் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பைனான்சியர் சாந்தகுமாரி கடத்தியது முன்னாள் திமுக கவுன்சிலர் கண்ணன் என்பதும், அவருக்கு ஆதரவாக மேலும் 6 பேர் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்ய  தனிப்படை அமைத்து  தேடிவந்தனர்.

இந்த நிலையில்,  நேற்று மதியம் பொள்ளாச்சி அருகே உள்ள மோதிரம்புரம் பகுதியில் ஒளிந்திருந்த திமுக நிர்வாக கண்ணன் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் அலெக்காக தூக்கினர். விசாரணையில், த  கண்ணன் (வயது51)  திமுகவைக் சேர்ந்தவர் என்பதும், முன்னாள் கவுன்சிலர் என்பதும் தெரிய வந்தது. மேலும், பொள்ளாச்சி காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார்(27) கண்ணப்பன் நகரைச் சேர்ந்த ஸ்டாலின்(30) காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன்(26) உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் 2 பேரை தேடி வருகின்னர்.

திமுகவைச் சேர்ந்தவ்ரகள் பைனான்சியரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் பொள்ளாச்சி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வணிகர்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது. விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் என்று,  ஆட்சி கனவில் மிதக்கும் திமுக தலைமை, திமுக எடுபிடிகளின் அடாவடியை கண்டிக்க வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகிறது.