சென்னை:
மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்/
பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது பாஜக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது
நேர்மையான நடுநிலையான மதசார்பற்ற அரசு மத்தியில் அமைய திமுக உறுதுணையாக இருக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம்
மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை
மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்
தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படும்
மாணவர்கள் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும்
மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
பெட்ரோல் டீசல் விலை பழைய நிலைக்கு மாற்றம் செய்யப்படும்
சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்