சென்னை,

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறு கிறது.

இந்த கூட்டத்தில் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இன்று திமுக தலைமையமான  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்  கூட்டத்துக்கு, கட்சியின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.

இன்று நடைபெற இருக்கும் கூட்டத்தில் கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்குபெற வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மற்றும் டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசிய குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும்  விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.