தேனி: ஓபிஎஸ்-ன் கோட்டையான  குச்சனூர் பேரூராட்சியை  திமுக அமோகமாக கைப்பற்றி உள்ளது. தேனி மாவட்டம் அதிமுக கோட்டை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது, அங்கு திமுக நுழைந்து அதகளம் செய்து வருகிறது. மேலும் கோவை உள்பட பல இடங்கள் அதிமுக கோட்டைகள் என கூறப்படும் பல பகுதிகளில்  இந்த தேர்தலில் தகர்தெறியப்பட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியான திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

இதுவரை 311 மாநகராட்சி, 499 நகராட்சி, 1602 பேரூராட்சி வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 31 மாநகராட்சி, 98 நகராட்சி மற்றும் 385 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தேனி மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. குச்சனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

அதிமுக வெற்றி தொகுதியாக இருந்து வந்த கோவையில் தொண்டமுத்தூர் உட்பட 7 பேரூராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தவித்து வருகிறழ. 

தஞ்சை மாவட்டம் வல்லம் பேரூராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. அங்கு மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 14 இடங்களுக்கு முடிவு அறிவிப்பு. திமுக 13 வார்டிலும் அதிமுக இதுவரை ஒரு வார்டில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அமமுகவின் முதல் வெற்றியாக இது உள்ளது.