சென்னை: திமுக , கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக குழு அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ள திமுக தலைமை,  இந்த குழுவினர் தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த தினமான  சஷ்டி தினமான பிப்ரவரி 22-ம் தேதி முதல் திமுக தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடையே, இதுவரை திமுக தலைமை தொகுதி பங்கீடு குறித்து ஏதும் பேசாத நிலையில், காங்கிரடஸ் கட்சியில் சலசலப்பு எழுந்தது. மாணிக்கம் தாக்ககூர் போன்ற சிலர் திமுக தலைமை மிரட்டும் வகையில் பேசி வந்தனர்.  மேலும்,  டெல்லியில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடனான ஆலோசனையை தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசி திமுக தலைமை உடனே குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான குழுவை உடனடியாக திமுக அமைக்க வேண்டும். திமுக தலைமையிலான கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படவில்லை; இதனால் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதில் குழப்பம் நிலவுகிறது. விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைத்து, தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளை தொடங்க வேண்டும்.” மேலும் முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  கூட்டணி கட்சிகளுடன் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது. இதற்காக, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், பகுதி-நகர-ஒன்றியக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள், சார்பு அணியினர், வாக்குச்சாவடி முகவர்கள் குழுவினர் என இலட்சக்கணக்கானோர், கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’, மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் வீடு வீடாக வெல்லும் தமிழ்பெண்கள் பரப்புரையை, மகளிர் படை மேற்கொள்ளவிருக்கிறது.

மேலும், வாக்குச்சாவடி குழுவினருக்கு நான்கு பயிற்சி மாநாடுகள், திருச்சியில் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும் திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர்.

இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. ழகத் தலைவர் அவர்களால் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் தோழமை கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்” என அதில் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நாளை தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பான தேதியை திமுக தலைமை அறிவித்துள்ளது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

[youtube-feed feed=1]