சென்னை: காஞ்சி தந்த காவியத் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி சமாதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக சார்பில் சென்னையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள், திமுக தொண்டர்கள் உள்பட ஏராளமானொர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
பேரணியானது அண்ணாசாலை அருகே உள்ள வாலாஜா சாலையில் இருந்து புறப்பட்டு, அண்ணா நினைவிடம் நோக்கி சென்றது. அங்கு சென்றதும், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எம்.பி. ஆ. ராசா, எம்.பி.டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.