சென்னை : திமுக தலைவர் கருணாநிதி சென்னை தனது வைரவிழா மலரை பார்க்கும் காட்சி பதிவு செய்யப்பட்டு ஒளிநாடாவாக வெளியிடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 94வது பிறந்தநாள். மேலும் சட்டப்பேரவையில் அவர் அடியெடுத்து வைத்து 60 வருடங்கள் நிறைவடைகின்றது.
இந்த இரு நிகழ்வுகளையும் கொண்டாடும் விதமாக இன்று விழா நடக்க இருக்கிறது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த வைரவிழா நடக்க இருக்கிறது.
இதில் ராகுல்காந்தி, நித்திஷ்குமார், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். அதே நேரம், முதுமை காரணமாக கருணாநிதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர, பிறந்தநாள் வாழ்த்து கூற, அவரை நேரில் சந்திக்க தொண்டர்கள் வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது வைரவிழா மலரை கருணாநிதியே பார்த்து கருத்து கூறும், திருத்தங்கள் சொல்லும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி தனி உதவியாளர் சண்முகநாதன் உள்ளிட்டவர்கள் விழா மலரை காண்பிக்கின்றனர்.
தங்களது தலைவரை நேரில் சந்திக்க முடியாத திமுக தொண்டர்கள் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சி கொள்கின்றனர்.
அந்த வீடியோ..