சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களை எம்.பி.க்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் போட்டியிட திமுகவைச் சேர்ந்த  எம்.எம் அப்துல்லா வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவர்  போட்டியின்றி தேர்வாக உள்ளார்.

தமிழகத்தில்  3 மாநிலங்களவை எம்.பி.க்கான இடங்கள் காலியாக உள்ளது. ஆனால், அதிமுக எம்.பி. முகமதுஜான் மறைந்த ஒரு இடத்துக்கு மட்டும் செப்.13ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தற்போதைய சட்டமன்றத்தில் திமுக பெரும்பான்மையுடன் உள்ளதால், இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிபெறுவது உறுதியான நிலையில் உள்ளது.

இந்த நிலையில், . மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்ததுடன், ஆகஸ்டு  27ம் தேதி  எம்.எம்.அப்துல்லா  சென்னை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில்  எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டதாகவும்,  சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்த 3 பேரின் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசியல் கட்சிகள் சார்பில் வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை  என்றும் தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இதனால்,  மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்எம் அப்துல்லா தேர்வாவது உறுதியாகி உள்ளது. , வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி. அன்றைய தினமே, வெற்றி பெற்றவர் யார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு   வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.