ஈரோடு:  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தனது வெற்றியை முதலமைச்சருக்கு சமர்பிப்பதாக  தெரிவித்து உள்ளார். திமுக வேட்பளாரை எதிர்த்து போராட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட அனைத்து  45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

திமுக வேட்பாளர் சந்திரகுமார் 90,629 வாக்குகள் பெற்றுஅமோக  வெற்றி பெற்றுள்ளார்.  நாதக வேட்பாளர், சீதாலட்சுமி டெபாசிட் இழக்காமல் இருக்க 25776 வாக்குகள் பெற வேண்டும். ஆனால் 23,872 வாக்குகளே பெற்றுள்ளார். அதனால் சீதாலட்சுமி உள்பட அனைத்து  சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா  மரணமடைந்த நிலையில்,  அடுத்து வந்த இடைத் தேர்தலில் அவரது தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கினார். அவரும்,  கடந்த  2024ம் ஆண்டு டிசம்பர் மாதம்  வயது மூப்பு மற்றும் நோய் காரணமாக உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025 பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடெபற்றத. இந்த தேர்தலை அனைத்து எதிர்க்கட்சிகளும் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுகவே களமிறங்கியது. அதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மட்டுமே களமிறங்கியது. மேலும் சுயேச்சைகள் உள்பட  46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று  (பிப்ரவரி 5ந்தேதி) காலை 8மணி முதல் எண்ணப்பட்டன. முதலில்  தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்ளில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

17வது சுற்று முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. 114,439 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. நாம் தமிழர் கட்சி 23,810 வாக்குகள் பெற்றுள்ளது. 17 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 90,629 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நோட்டா – 6040 வாக்குகளை பெற்றுள்ளது.

திமுக தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். நாம் தமிழர் கட்சி டெபாசிட் இழந்தது.

மூன்று பெட்டிகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த 3 இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே தற்போது எண்ணப்படுகின்றன. இந்த எண்ணிக்கை நிறைவடைந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சந்திரகுமார், தனது வெற்றியை முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்பதாக  தெரிவித்தார். . அதேபோல் இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், இந்த இடைத்தேர்தலை பொறுப்பேற்று என்னை வழிநடத்தி நேரடியாக மக்களை சந்தித்துதான் ஓட்டுகளை பெற வேண்டும் என்று சொல்லி, ஈரோடு கிழக்கு தொகுதி ஃபார்முலாவை உருவாக்கி மாபெரும் வெற்றியை பெற வைத்த எங்கள் மாவட்ட அமைச்சர் சு.முத்துசாமிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

இந்த தொகுதியில் நிறைய பேர் என்னன்னவோ சொன்னலும் கூட, விதவிதமாக பரப்புரைகள் மேற்கொண்டாலும் சரி, திமுகவை தோற்கடிக்க வேண்டு மென்ற ஒரே நோக்கத்தோடு 46 வேட்பாளர்கள் இந்த களத்தில் நின்றாலும், திமுக 75 % வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை உதய சூரியன் சின்னம் பெற்றிருக்கிறது. இனி நான் எப்படி செயல்படப் போகிறேன் என்பதை பார்க்கத்தான் போகிறீர்கள். வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்றார்.