சென்னை:

பொன்பரப்பியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட  சம்பவத்தின் பின்னணியில் திமுக உள்ளதாக, பா.ம.க. செய்தி தொடர்பாளர் பாலு பகிரங்கமாககுற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று புதுக்கோட்டைமாவட்டம் பொன்பரப்பி அருகே 2 சமூகத்தின ரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக  பலர் தாக்கப்பட்ட நிலையில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் தாக்கப்பட்டன. இது தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் பல ஆடியோக்கள் பரவி,  மேலும் வன்முறைகள் தொடர்ந்ததால், புதுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்கிளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பொன்பரப்பியில் நடைபெற்றது என்ன, இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுபவர் யார், இந்த சம்பவத்துக்கு பின்புலம் என்ன என்பது குறித்து, பாமக பாலு இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது,  சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி எனும் ஊரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ல் வாக்களிக்க வருபவர்களை மோர் தருகிறோம் என்று தங்களது கட்சி சின்னமான பானையை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்துள்ளனர். அபோது, அங்க ஒட்டு போட வந்த வீர பாண்டியன் என்பவரை, வழிமறித்து விசிகவினர் பிரச்சினை செய்து தாக்கி உள்ளனர்.

இதையடுத்து, அவரை தாக்கியது ஏன் கேட்க சென்ற  பாமக கட்சியினரை விசிக தொண்டர்கள் கல்லால் அடித்ததாகவும்,  அவர்களை விரட்டவே பமாகவைச் சேர்ந்த தொண்டர்கள் பொன்பரப்பி ஊருக்குள் துரத்தி சென்றதாகவும், இந்த வீடியோவை விசிக திட்டமிட்டு பரப்பி வருவதாகவும் கூறினார்.

இதனை படம்பிடித்த போது தான் தனியார் செய்தி நிறுவனத்தை சேர்ந்த கலைவானன் என்பவரை விசிகவினர் தாக்கியதாக கூறிய பாமக பாலு, ஏற்கனவே நடைபெற்ற தர்மபுரி இளவரசன் சம்பவம் முதல் பொன்பரப்பி சம்பவம் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியை குறிவைத்து பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.

சிதம்பரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு   வெற்றி வாய்ப்பு இருந்தும் மோதல் ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே போட்டியிடவில்லை என்று கூறிய பாலு,  அங்கு எந்தவொரு  அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் மக்களவைத் தொகுதி விட்டு கொடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

பொன்பரப்பி சம்வம் தொடர்பாக திருமாளவன் மு.க.ஸ்டாலினை சந்தித்ததை நினைவுகூர்ந்த பாலு, அதன்பிறகே போராட்டம் என்று அறிவித்து உள்ளதாகவும், இதையெல்லாம் பார்க்கும்போது,  இதற்கு பின்னணியில் ஸ்டாலின் இருப்பது தெரிய வருவதாக கூறியவர்,  ஆளும் அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத் திற்காக தான் இவ்வாறு திட்டமிட்ட செயல்பட்டு வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

ஸ்டாலின் அரசியல் ஆதாயம் வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளார் என்றும்,  பொன்பரப்பியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 நபர்களில் அமமுக வைச் சேர்ந்த  3 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், பாமகவின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்க்காக மட்டுமே இந்தக் கலவரம் தூண்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பாமக பாலு தெரிவித்தார்.