சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி  அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக  திராவிட முன்னேற்றக் கழகம்  அறிவித்துள்ளது.  இந்த தலைவர் மூத்த தலைவர் ஆலந்தூர் பாரதி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக  திமுக கூட்டணி கட்சகிள் அனைத்தும் அறிவித்துள்ள நிலையில், தற்போத ஆளுங்கட்சியான திமுகவும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது.  ஆனால், அதிமுக, பாஜக, தமாகா உள்பட பாஜக கூட்டணி கட்சிகள் பங்கேற்பதாக தெரிவித்து உள்ளது.

ஆகஸ்டு  15ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  வாடிக்கையாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,   மாநில அரசின் முதல்வர், அமைச்சர்கள் மற்றும்  பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய விருந்தினர்களுக்கு ஆளுநர்  சார்பில் தேநீர் விருந்து அளிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும்,   சுதந்திர தின விழா தேநிர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்டடிருந்தது. இதை ஆளும் திமுக அரசு புறக்கணிப்பதாக அறிவித்து  உள்ளது.

தமிழக ஆளுநர் பதவி  கடந்த மாதத்துடன் ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரது பதவி நீட்டிப்பு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், ஆர்.என்.ரவியே  ஆளுநராக இருந்து வருகிறார். இந்த  சூழலில்  ஆளுனரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக  தமிழக அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் செய்தியளார்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது. அரசு சார்பாக பங்கேற்பது குறித்து முதலமைச்சர் இன்று மாலை தெரிவிப்பார் என கூறினார்.