விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக – விசிக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், தொகுதிகளில் உள்பட 11 ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாமக தனித்துப் போட்டியிடுவது என்பதும், அதேபோல் அமமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மையம் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.