சென்னை

திமுக மற்றும் அட்ர்ஹிமுக மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்வு செய்​யப்​பட்ட வைகோ, பி.​வில்​சன், சண்​முகம், முகமது அப்​துல்​லா, அன்​புமணி மற்​றும் சந்​திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்​காலம் வரும் ஜூலை 27-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. காலி​யாக உள்ள 6 இடங்​களுக்​கான தேர்தலை தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. தமிழக சட்​டப்​பேர​வை​யில், எம்​எல்​ஏக்​கள் பலம் அடிப்​படை​யில் 6 இடங்​களில் 4 திமுக​வுக்​கும், இரண்டு அதி​முக​வுக்​கும் கிடைக்​கும்.

எனவே திமுக சார்​பில் 4 இடங்​களுக்கு மக்​கள் நீதி மய்​யம் கட்​சித்தலை​வர் கமல்​ஹாசன், பி.​வில்​சன், கவிஞர் சல்​மா, சிவலிங்​கம் ஆகியோர் அறிவிக்​கப்பட்டுள்​ளனர். அதி​முக சார்​பில், தனபால் மற்​றும் ஐ.எஸ்​.இன்​பதுரை ஆகியோர் அறிவிக்​கப்​பட்​டுள்​ளனர். கடந்த ஜூன் 2-ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்​புமனுத்​தாக்​கல் தொடங்​கியது.

வரும் ஜூன் 9-ம் தேதி வரை மனுத்​தாக்​கல் செய்​ய​லாம். முதல் நாளில், 2 சுயேச்​சைகள் மனுத்​தாக்​கல் செய்​தனர். அதன்​பின் கடந்த இரு தினங்​களாக யாரும் மனுத்​தாக்​கல் செய்​ய​வில்​லை. இந்த நிலையில், இன்று (ஜுன் 6) திமுக, அதிமுக சார்பில் போட்யிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா மற்றும் சிவலிங்கம் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல், அதிமுக வேட்பாளர்களான தனபால் மற்​றும் ஐ.எஸ்​.இன்​பதுரை ஆகியோர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.