சென்னை
தி மு க தனது கூட்டணி கட்சிகளான இந்திய முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கி உள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. இதில் தி.மு.க.வில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது.
கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்திலேயே கொங்கு மக்கள் தேசிய கட்சி போட்டியிட உள்ளது.
இதைப் போல் அ.தி.மு.க. தரப்பில் மாபெரும் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. முன்பு ஏற்கனவே கூட்டணியில் இருந்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் மீண்டும் இழுக்க அ.தி.மு.க. தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
DMK, one seat, Indian Union Muslim League, KMDK,