தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி: பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக்கணிப்பில் தகவல்

Must read

சென்னை:

மிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக  லயோலா கல்லூரி  முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில்  திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிகழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40  நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 27 முதல் 33 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப் பட்டுள்ளது.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பான பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்து கணிப்புபை இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.

அதில், நடைபெற்ற  18 சட்டமன்ற இடைத்தேர்தலில், 

திமுக: 9 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

அதிமுக: 2 முதல் 3 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

அமமுக: 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 2 தொகுதி முடிவுகளை கணிக்க முடியாத நிலை உள்ளது. என்று தெரிவித்து உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட  40 நாடாளுமன்ற தொகுதிகள்:

திமுக கூட்டணி:  27 முதல் 33 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

அதிமுக கூட்டணி: 3 முதல் 5 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

அமமுக கூட்டணி: 1 முதல் 2 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வெளியிட்டுள்ளனர். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

 

More articles

Latest article