நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை மாநகரம் மற்றும் அதை சுற்றி அமைந்த புறநகர் தொகுதிகள் முழுவதையும் சிந்தாமல் சிதறாமல் அள்ளியுள்ளது திமுக அணி.
சென்னை மாநகரில், வேளச்சேரியை மட்டும் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 15 தொகுதிகளிலும் திமுக களமிறங்கியது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையிலுள்ள 16 தொகுதிகள், அதைச்சுற்றியுள்ள திருவொற்றியூர், மாதவரம், பூந்தமல்லி, ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல் ஆகிய அனைத்தையும் ஒட்டுமொத்தமாக அள்ளியுள்ளது திமுக.
தமிழ்நாட்டில், வடக்கு, மத்தி மற்றும் தென் மண்டலங்களில் சிறப்பான வெற்றியை ஈட்டியதால், மேற்கு மண்டலத்தில் கோட்டைவிட்டாலும், திமுகவால் பெரும்பான்மையைப் பெற முடிந்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை, முழுமையான அளவில் கைப்பற்றியுள்ளதானது, திமுக வட்டாரத்தில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.