சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலின்படி, திமுக அதிமுக இடையே 130 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.
அதுபோல, அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களை பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் 18 தொகுதிகளிலும் திமுக நேரடியாக மோதுகிறது.
மற்றொரு அதிமுக கூட்டணி கட்சியான பாஜக, தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட இருக்கும் நிலையில், அதில் 14 தொகுதிகளில், திமுக நேரடியாக களமிறங்குகிகறது.
இன்னொரு அதிமுக கூட்டணி கட்சியான தமாகாவை எதிர்த்து 4 தொகுதிகளிலும் திமுக நேரடியாக களமிறங்குகிறது.