சென்னை:

திமுக பாஜக கூட்டணியில் தேமுதிக சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்து பேசப்போன  தேமுதிகவின் தலைவரின் மனைவி பிரேமலதா வின்  நிபந்தனை கண்டு அரண்டு போன மத்திய அமைச்சர் பதில் தெரிவிக்காமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேமுதிக நிர்வாகிகளுடன் தேமுக துணைச் செயலாளர் சுதீஷ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக தலைமையில் பாஜக மெகா கூட்டணியை அமைக்க முயற்சி எடுத்து வருகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜக, பாமக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தேமுதிகவையும் கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.

கூட்டணி தொடர்பாக நேற்று பிற்பகல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று பேசிய பாஜக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பிரேமலதாவின் நிபந்தனை மற்றும் பாமகவை போல தங்களுக்கு 8 தொகுதிகள் வேண்டும் என்று அடம் பிடித்ததால், பதில் கூற முடியாமல் வெளியேறியதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க அதிமுக தலைமை முடிவு  செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்  நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக  கட்சி தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் சுதீஷ்  அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

கள்ளக்குறிச்சி, கடலூர் தொகுதிகள் ஒதுக்குவது சம்பந்தமாக கூட்டணி இழுபறி யில் இருப்பதாகவும், இந்த தொகுதிகளை பாமகவும் கேட்டுள்ளதால் பிரச்சினை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.