சட்டசபை தேர்தலில் தேமுதிக நிலை பற்றி விரைவில் அறிவிப்பு: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

Must read

சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் நிலை பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

தேர்தல் வியூகம், பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது. செயற்குழு, பொதுக் குழு கூட்டப்பட்டு அதன் பிறகு கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்.

கூட்டணி தரப்பில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் முதல்வர் வேட்பாளரை தேமுதிக ஏற்கும். தேமுதிக எப்போதும் முரசு சின்னத்தில் தான் போட்டியிடும்.

தேமுதிகவில் இருந்து வெளியேறிச் செல்பவர்கள் குப்பைகள். தேமுதிகவில் குப்பைகளை சுத்தம் செய்து தரும் பிற கட்சிகளுக்கு நன்றி என்று கூறினார்.

More articles

Latest article