சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில்வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 5-ம் தேதி, அனைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
‘பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் ஹட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், கொரோனா தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் வரும் 5 ம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.’
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.