சென்னை:
தன்மீதான அவதூறு வழக்கை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அவதூறாக பேசிவிட்டு தற்போது வாபஸ் கேட்பதா? என விஜயகாந்துக்கு கடும் கட்டணம் தெரிவித்து.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 2012 ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அப்போதைய முதல்வர ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அவர்மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தற்போது அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியில் இருப்தால், பல அவதூறு வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விஜயகாந்த் தரப்பில், அவதூறு வழக்கை எதிர்த்து செய்த மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, பேசிய கருத்துக்கள் அனைத்தும் அவதூறானவையே. கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பதா? என கண்டனம் தெரிவித்ததுடன், விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.