சென்னை: டிசம்பர் 6 ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், தேமுதிக சார்பில் டிசம்பர் 6 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அறிவித்து உள்ளது.
இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Patrikai.com official YouTube Channel