சென்னை:
டந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி வட்டாரம் கலகலத்துபோய் உள்ளது. பல மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.
dmdk dhaksinamurthy
சட்டமன்ற தேர்தலின்போது சந்திரகுமார் எம்எல்ஏ தலைமையில் ஒரு குரூப் கட்சியிலிருந்து விலகி மக்கள் தேமுதிக என்று புதிய கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்தது. தற்போது அந்த கட்சி திமுகவுடன் ஐக்கியமாகி விட்டது.
இதற்கிடையில் கடந்த வாரம்  தேமுதிகவின் டெல்லி மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி  கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
நீக்கப்பட்ட தேமுதிகவின் டெல்லி மாஜி மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி முதல்வர் ஜெயலலிதா  முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். முதல்வர் ஜெயலலலிதா அவருக்கு உறுப்பினர் கார்டு கொடுத்து கட்சியில் இணைத்துக்கொண்டார்.