பெங்களூரு:

ர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கர்நாடகாவில் கடந்த 5ந்தேதி (டிசம்பர் ) நடைபெற்ற 15 சட்டமன்ற தொகுதிகளுக்கான  இடைத் தேர்தலில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெறும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், .காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து,  தோல்விக்கு பொறுப்பேற்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவரம்,  எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து,  மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், அவரது ராஜினாமா ஏற்கப்படுவது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ மானஅறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சிவகுமார் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக  நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக  தகவல்கள்  வெளியாகி உள்ளன.

மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியைப் பெற   முன்னாள் மத்திய அமைச்சர் முனியப்பா, முன்னாள் அமைச்சர்கள் சிவகுமார், எம்.பி.பாட்டீல், எச்.கே.பாட்டீல், கிருஷ்ண பைரே கவுடா, ராஜ்யசபா எம்.பி., ஹரிபிரசாத் என பலர் முயற்சி செய்து வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் இருந்து மூத்த தலைவர் மதுசூதன மிஸ்தரிகடந்த வாரம் பெங்களூரு வந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்  சிவக்குமாரரை  கர்நாடக மாநில தலைவராக நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு இடைக்காலத் சோனியா சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.