இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் – முதலிடத்தில் நீடிக்கும் ஜோகோவிக்!

Must read

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் கைப்பற்றியதை அடுத்து, உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார் செர்பியாவின் ஜோகோவிக்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை ருமேனியாவின் ஹாலெப் வென்ற நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிக் – அர்ஜெண்டினாவின் ஸ்வார்ட்ஸ்மேன் மோதினர்.

இதில் எளிதாக வென்ற ஜோகோவிக், இத்தாலி ஓபன் கோப்பையை 5வது முறையாக வென்றார். மேலும், இது இவரின் 36வது மாஸ்டர்ஸ் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம், ‘மாஸ்டர்ஸ்’ அந்தஸ்து பெற்ற தொடரில், அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை செய்துள்ளார். ஸ்பெயினின் ரபேல் நாடல் 35முறை இந்த சாதனையை செய்திருந்தார்.

தற்போது வெளியிடப்பட்ட ஆண்கள் தரவரிச‍ைப் பட்டியலில், செர்பியாவின் ஜோகோவிக், ஸ்பெயினின் ரபேல் நாடல், ஆஸ்திரியாவின் டொமினிக் தியம்  ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

More articles

Latest article